Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலை- 2 படத்தின் 'தினம் தினமும்' என்ற சிங்கிள் பாடல் நவம்பர் 17ல் வெளியாகிறது! | சீனாவில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மகாராஜா! | ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரத்து வழக்கு: சமரசப் பேச்சு நடத்த நீதிபதி உத்தரவு | விஜய் 69: அமெரிக்கா வினியோக உரிமை விலை 25 கோடி? | 200ஐக் கடந்தது 2024ல் வெளியான திரைப்படங்கள்… | அன்று 'மொத்த வித்தை', இன்று '2000 கோடி' - சூர்யாவுக்கான சறுக்கல்கள் | வட இந்தியாவில் நிகழ்ச்சி - 'கேம் சேஞ்சர்'ஐத் தொடர்ந்து 'புஷ்பா 2' | 'கங்குவா' இரைச்சல் சத்தம், ரசூல் பூக்குட்டி 'கமெண்ட்' | கங்குவா - 'கேமியோ'வாக வந்த கார்த்தி பெயர் இரண்டாவது இடத்தில்… | வளர்ப்பு மகள் மீது 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து நடிகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கங்குவா' இரைச்சல் சத்தம், ரசூல் பூக்குட்டி 'கமெண்ட்'

15 நவ, 2024 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Resul-Pookutty-on-Kanguva's-loud-soundscape:-No-film-will-have-a-repeat-value-if-the-audience-walk-out-with-head-ache


'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக 'சிறந்த சவுண்ட் மிக்சிங்' ஆஸ்கர் விருது, 'பழசிராஜா' மற்றும் 'ஒத்த செருப்பு சைஸ் 7' ஆகிய படங்களுக்காக சிறந்த ஆடியோகிராபி தேசிய விருதுகள், ஆகியவற்றைப் பெற்றவர் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. தமிழில், “எந்திரன், கோச்சடையான், ரெமோ, 2.0, ஒத்த செருப்பு சைஸ் 7,' உள்ளிட்ட படங்கள் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.

சூர்யா நடிப்பில் நேற்று வெளியான 'கங்குவா' படம் பற்றிய அவரது பதிவு ஒன்றை, படத்தின் விமர்சனக் கருத்து அடங்கிய புகைப்படம் ஒன்றுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “என்னுடைய நண்பர், ரீ ரிக்கார்டிங் மிக்சர் இந்த கிளிப்பை எனக்கு அனுப்பினார். நமது பிரபலமான படங்களில் ஒலி பற்றிய இது போன்ற விமர்சனத்தைப் பார்ப்பது மன வருத்தமாக இருக்கிறது. எங்கள் கைவினைத் திறனும், கலைத் திறனும் உரத்தப் போரில் சிக்கிக் கொண்டது யார் குற்றம்? சவுண்ட் அமைப்பைச் செய்தவருடையதா? அனைத்து பாதுகாப்பில்லாத தன்மையைப் போக்க கடைசி நேரத்தில் எண்ணற்ற திருத்தங்கள் வருகின்றன. எங்களது கலைஞர்கள் பல சமயங்கள் உங்கள் கால்களில் விழுந்து எல்லாவற்றையும் சத்தமாகவும், தெளிவாகவும் சொல்கிறார்கள். தலைவலியுடன் ரசிகர்கள் ஒரு படத்தை விட்டு வெளியேறும் போது அந்தப் படத்திற்கு ரிபீட் மதிப்பு திரும்ப கிடைக்காது,” என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

'கங்குவா' படத்தைப் பார்த்த விமர்சகர்கள், எண்ணற்ற ரசிகர்கள் சொல்லும் முக்கிய குறை படத்தின் சத்தம், இரைச்சல். ஆரம்பம் முதல் கடைசி வரை கதாபாத்திரங்கள் பேசுவதை விட கத்திக் கொண்டே இருப்பதும், பின்னணி இசை அதிக ஒலியுடன், இரைச்சலாக இருப்பதுமே இந்தப் படத்தின் முக்கியமான நெகட்டிவ் அம்சமாக உள்ளது. அதை உடனடியாகத் திருத்தினால் மட்டுமே ரசிகர்கள் அச்சமில்லாமல் வந்து பார்க்க வாய்ப்பாக இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கங்குவா - 'கேமியோ'வாக வந்த கார்த்தி பெயர் இரண்டாவது இடத்தில்…கங்குவா - 'கேமியோ'வாக வந்த கார்த்தி ... வட இந்தியாவில் நிகழ்ச்சி - 'கேம் சேஞ்சர்'ஐத் தொடர்ந்து 'புஷ்பா 2' வட இந்தியாவில் நிகழ்ச்சி - 'கேம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)