எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை |

பாலிவுட்டின் பிரபல நடிகை பல்லவி ஜோஷி. தற்போது ‛தி பெங்கால் பைல்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதை அவரது கணவரும், இயக்குனருமான ‛தி காஷ்மீர் பைல்ஸ்' பட புகழ் அக்னி கோத்ரி இயக்கி உள்ளார். செப்., 5ல் திரைக்கு வரும் இப்படத்தினை விளம்பரம் செய்வதில் தீவிராக இருந்த பல்லவி ஜோஷி அளித்த பேட்டி....
நீங்கள் நிறைய புத்தகங்களை படிப்பீர்கள், அது தான் உங்களை படங்களில் ஒப்பந்தமாக தூண்டுகிறதா...?
உண்மையைச் சொல்லப் போனால், நான் படிக்கும்போது படங்களைப் பற்றி யோசிப்பதில்லை, ஏனென்றால் பைத்தியமாகிவிடும் (சிரிக்கிறார்). ஆனால் வாசிப்பது மறைமுகமாக என்னையும் தாண்டி சில விளைவுகளை தந்துள்ளது. முன்பு நான் கதைகள் மற்றும் நாவல்களைப் படிப்பேன். இப்போது நான் பெரும்பாலும் புனைவுக்கதை அல்லாத இலக்கியங்களை படிக்கிறேன்.
வாசிப்பு, நாம் எவ்வளவு உணர்வுகளாலும் தவறான புரிதல்களாலும் வடிவமைக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம் என்பதை உணர வைக்கிறது. உதாரணமாக, 'பிரதம மந்திரிகளை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்' என்ற புத்தகத்தைப் படித்தபோது, ராஜீவ் மக்களின் பிம்பத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் ஒரு விமானி, பலருக்கு நண்பர், மற்றும் அரசியலுக்கு வருவதற்கு முன் பலவிதமான அனுபவங்களால் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர். இதை வாசிப்பின் மூலமே தெரிந்து கொண்டேன்.
சில ஆண்டுகளாக நீங்கள் உங்கள் கணவர் விவேக் படங்களில் மட்டுமே பணியாற்றுகிறீர்கள். எதனால் இந்த முடிவு...?
அப்படியில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் 2005க்கும் பின் எந்த படத்திலும் நான் பணியாற்றவில்லை. இது நானாக எடுத்த முடிவல்ல, என்னை யாரும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. திருமணத்திற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுத்தேன். அந்த நேரத்தில், நான் ச ரி க ம ப மராத்தி என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினேன். தயாரிப்பு துறையிலும் சில வேலைகளைச் செய்தேன். எனது மறுபிரவேசம் குறித்து ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. நடிகை ரேணுகா ஷஹானே தனது 'ரீதா' படத்திற்கு முன்னணி நடிகையைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் என்னிடம், "நீ ஏன் ரீதாவில் நடிக்கக் கூடாது?" என்று கேட்டார். ஏதோ நகைச்சுவைக்காக அப்படி கேட்டார் என நினைத்தேன், ஆனால் உண்மையில் நீ தான் ரீதா'' என்றார். அதேப்போல் நடந்தது.
உங்கள் படங்கள் எப்போதும் சர்ச்சையில் சிக்குகின்றன. அது உங்களுக்கு நன்மையா... தீங்கா...?
நன்மை என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் படத்தைப் பற்றி அதிக சர்ச்சை இருந்தால், அதைப் பற்றி மக்களும் அதிகம் பேசுகிறார்கள். பிறகு, பார்வையாளர்களே படத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் நான் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை, பார்வையாளர்களின் வரவேற்பு, பதிலை மட்டுமே மதிக்கிறேன்.