ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
சிவா இயக்கத்தில், சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'கங்குவா'. இப்படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள்தான் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்களில் படம் பற்றிய 'டிரோல்கள், மீம்ஸ்கள்' ஆகியவையும் நிறைய பரவி வருகின்றன.
இந்தப் படம் குறித்து அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, வினியோகஸ்தர் சக்திவேல் ஆகியோர் கொடுத்த 'ஓவர் பில்டப்' ஆகியவைதான் 'டிரோல் மெட்டீரியல்கள்' ஆக மாறியுள்ளன. அவர்கள் அடக்கி பேசியிருந்தால் இந்தப் படம் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க வரவேற்பையாவது பெற்றிருக்கும் என சூர்யா ரசிகர்களே வருத்தப்பட்டுப் பேசுவதை பார்க்க முடிகிறது.
இதனிடையே, படம் முடிந்த பின் 'என்ட் டைட்டில்' ஓடவிடப்படுகிறது. அதில் படத்தின் கிளைமாக்சில் ஓரிரு நிமிடங்களே வந்த கார்த்தியின் பெயர் சூர்யா பெயருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. பாபி தியோல், திஷா படானி ஆகியோரது பெயர்கள் அதற்கடுத்தே இடம் பெற்றுள்ளது.
படம் முடிந்த பின்பு தியேட்டரில் பொறுமையாக அமர்ந்து அந்த 'என்ட் டைட்டிலையும்' பார்ப்பவர்கள் இது பற்றி தியேட்டர்களில் கமெண்ட் அடிப்பதை நேற்றைய பத்திரிகையாளர் காட்சியிலேயே பார்க்க நேரிட்டது. படத்தின் நாயகன் அண்ணன் என்பதாலும், படத்தின் தயாரிப்பாளர் உறவினர் என்பதாலும் கார்த்தியின் பெயரை இப்படி இரண்டாவது இடத்தில் வைத்துவிட்டார்களோ என்ற கமெண்ட் காதில் விழுந்தது.