Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

10 நாட்களில் ரூ. 200 கோடி எட்டிய அமரன்; லக்கி பாஸ்கர் ரூ.77 கோடியை கடந்தது

10 நவ, 2024 - 03:03 IST
எழுத்தின் அளவு:
Amaran-crosses-Rs-200-crore-in-10-days;-Lucky-Bhaskar-crosses-Rs-77-crore


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது.

இந்த படம் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களில் அதிகமாக வசூலித்த படமாக அமரன் அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

லக்கி பாஸ்கர்

வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் ' லக்கி பாஸ்கர்'. வங்கி பண மோசடி, ஸ்டாக் மார்க்கெட் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இப்பம் உருவாகியிருந்தது. இத்திரைப்படம் வெளிவந்த 9 நாட்களில் உலகளவில் ரூ. 77 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் தமிழ் பதிப்பு மட்டும் ரூ. 10 கோடி வசூலை நெருங்கியுள்ளது என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பிரபாஸுடன் இணையும் திரிஷாமீண்டும் பிரபாஸுடன் இணையும் திரிஷா ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு காஸ்ட்லி வாட்ச் பரிசளித்த சிவகார்த்திகேயன் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு காஸ்ட்லி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)