லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிக்பாஸ் சீசன் 8ல் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில், குறும்படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து பிரபலமான சவுந்தர்யா நஞ்சுண்டானும் கலந்து கொண்டு ஸ்கோர் செய்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சோகமான நிகழ்வினை கூறி வந்தனர். அதில், சவுந்தர்யாவும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த 17 லட்ச ரூபாய் பணத்தை ஒரு பிராடு போன் காலில் இழந்ததாக கூறியிருந்தார். இதனை பலரும் பொய் என விமசித்து வந்தனர்.
இந்நிலையில் சவுந்தர்யா நஞ்சுண்டான் கடந்த செம்படம்பர் மாதம் பணம் தொலைந்ததற்காக அளித்துள்ள போலீஸ் புகாரின் புகைப்படத்தையும் அப்போது அவர் பதிவிட்ட சோஷியல் மீடியா பதிவையும் ரசிகர்கள் தேடி எடுத்து ஷேர் செய்துள்ளனர். சவுந்தர்யா பணம் தொலைந்ததாக கூறுவது பொய் இல்லை என்றும் நிரூபித்துள்ளனர்.