ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 10ம் தேதி வெளியான படம் 'வேட்டையன்'. சுமாரான வெற்றி, வரவேற்புடன் தியேட்டர்களில் ஓடிய இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
படத்தின் கதையம்சம் சிறப்பாக இருந்தது என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் ரஜினிகாந்த்தின் முழுமையான படமாக இல்லை என்ற குறையும் இருந்தது. இருப்பினும் ஓடிடி தளத்தில் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம். அப்படி ஒரு வரவேற்பு இந்தப் படத்திற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 10ம் தேதி வெளியான 'வேட்டையன்' படம் நான்கே வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. ஆனாலும், ரஜினிகாந்த் முக்கிய தோற்றத்தில் நடித்து பிப்ரவரி 9ம் தேதி வெளியான 'லால் சலாம்' படம் ஒன்பது மாதங்களாகியும் இன்னும் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் உள்ளது.
செப்டம்பர் மாதமே இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது 'ஹார்ட் டிஸ்க்'ல் காணாமல் போன காட்சிகளைத் தேடி எடுத்துவிட்டதாகவும், அவற்றுடன் சேர்த்து புதிதாக எடிட் செய்யப்பட்ட படமாக ஓடிடியில் வரும் என்றும் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனாலும் அதன்பின் அது குறித்த அப்டேட் எதுவும் இதுவரையிலும் வெளியாகவில்லை.