நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த படம் 'கருடன்'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று சுமார் 50 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.
அப்படத்தைத் தற்போது தெலுங்கில் 'பைரவம்' என்ற பெயரில் ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பெல்லம்கொன்டா சீனிவாஸ், மஞ்சு மனோஜ், நர ரோகித் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூரி நடித்த கதாபாத்திரத்தில் சீனிவாஸ் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது.
'நாந்தி' படத்தை இயக்கிய விஜய் கனகமெடலா இப்படத்தை இயக்க, ஸ்ரீ சரண் பகலா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 2025ம் ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.