வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் பெ. அமுதா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என். இராமசாமி (எ) முரளி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி.எஸ்.முருகன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, செயலாளர் சாமிநாதன், பொருளாளர் செந்தில், சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் சிமாவின் தற்போதைய நிலவரம், பையனூரில் அமைக்கப்பட்டு வரும் திரைப்பட நகரம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.