நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் ' தக் லைப்'. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், டில்லி, புதுச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் 120 நாட்களுக்கு மேல் நடந்து சமீபத்தில் நிறைவு பெற்றது. இதில் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருந்த நிலையில் தற்போது த்ரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தக் லைப் படத்தின் பாடல் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த ஆல்பத்தில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் என குறிப்பிடப்பட்டுள்ளார். சிம்பு, த்ரிஷா இருவருக்கிடையே உள்ள காதல் பாடலான இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.