'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை | 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? |

பிரபல பாடகர் திப்புவின் மகன் சாய் அபியன்கர். சமீபகாலமாக இளைஞர்களின் மனம் கவர்ந்த பாடகராக மாறி உள்ளார். ‛‛கட்சி சேர, ஆசை கூட...'' போன்ற ஆல்பம் பாடல்களை இவர் இசையமைத்து, பாடி அதில் நடனம் ஆடியவர். இவரின் ஆல்பம் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் இவர் முதல் முறையாக ஒரு படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் 'பென்ஸ்' படத்திற்கு சாய் அபியன்கர் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். இந்த படத்தில் சுமார் 7 பாடல்கள் இடம் பெறுகிறது என்பது கூடுதல் தகவல்கள்.