பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்த படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு இப்படம் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார் சுகுமார். இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஆனால் முதல் பாகத்தில் குறைவான காட்சிகளில் நடித்திருந்த பஹத் பாசிலுக்கு இந்த இரண்டாம் பாகத்தில் மெயின் வில்லனாக கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார். அதிலும் அல்லு அர்ஜுன் பஹத் பாசில் மோதிக் கொள்ளும் ஒரு சண்டை காட்சியை ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளாராம்.