‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படப்பிடிப்பு நிறைவடைந்தது | ஓடிடி-யில் கலக்கும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 'கிங்ஸ்டன்' | பூரி ஜெகன்நாத் உடன் இணைவது குறித்து விஜய் சேதுபதி | கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி | 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' | பிளாஷ்பேக்: காட்சியை தத்ரூபமாக்க, கழுதைகளை கொண்டுவரச் செய்து, படப்பிடிப்பு நடத்திய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரம் | இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி |
ராயன் படத்தை அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். அவர் இயக்கி உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் நடித்து வரும் தனுஷ், அடுத்தபடியாக இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப் போகிறார். போர்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா மற்றும் லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்கப் போகிறார். இதில் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தை தற்போது தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரிக்கும் ஆகாஷே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.