பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
ஷோபா தற்கொலை செய்வதற்கு சில நாட்கள் முன்பு வரை நடித்த படம் 'சாமந்திப்பூ'. கே.எஸ்.மாதங்கன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அவருடன் சிவகுமார் நடித்திருந்தார். 80 சதவிகிதம் படம் முடிந்திருந்த நிலையில்தான் ஷோபா தற்கொலை செய்து கொண்டார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்து நின்றார். படத்தை வெளியிட முடியாது, பண்ணிய செலவெல்லாம் வீண் என்று அவர் கவலைபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு உதவிக்கு வந்தார் எடிட்டர் மோகன் (ஜெயம் ரவியின் தந்தை).
ஷோபாவை போன்ற ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவரை லாங் ஷாட்டிலும், முதுகு புறமாகவும் காட்டி படத்தை முடித்தார். அதோடு கதைப்படி ஷோபா தன் காதலர் சிவகுமாருடன் இணைய வேண்டும். ஆனால் அவர் காதல் நிறைவேறாத சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கதையை மாற்றி ஷோபா மரணமடைந்த பிறகு எடுக்கப்பட்ட அவரது நிஜமான இறுதி ஊர்வல காட்சியை படத்தில் இணைத்து வெளியிட்டார்கள். 'இத்திரைப் படத்தின் இறுதிக் காட்சிகளில் நடிகை ஷோபாவின் இறுதி ஊர்வலம் காட்டப்படும்' என்று விளம்பரமும் செய்தார்கள்.