வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
"புது ராகம் படைப்பதாலே... நானும் இறைவனே...'' - இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையா, இப்பாடலுக்காக இசையை கோர்த்த இசைஞானி இளையராஜாவுக்கு சாலப்பொருந்தும். தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இந்திய சினிமாவின் இசை மேதையான இளையராஜா 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஒரு சிம்பொனி இசையை வெளியிட்டு இருந்தார். இப்போது இங்கிலாந்தில் தான் பதிவு செய்த சிம்பொனியை வெளியிட போகிறார். இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள இளையராஜா, அதன் உடன், ‛இங்கிலாந்தில் நான் பதிவு செய்த முழு சிம்பொனி இசையை அடுத்தாண்டு ஜன., 26ல் வெளியிட போகிறேன். இதை இந்த தீபாவளி திருநாளில் அறிவிப்பது மகிழ்ச்சி' என குறிப்பிட்டுள்ளார்.