வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரால் கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஜாபர்சாதிக்குடன் தொடர்பில் இருந்த திரைப்பட இயக்குனர் அமீரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தை அமீர் இயக்கி வந்தார்; மற்றும் அவருடன் இணைந்து சில தொழில் நிறுவனங்களையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி ஜாபர்சாதிக், அமீர் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை கோர்ட்டில் ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது அமலாக்கத்துறை 302 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையில் ஜாபர்சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கிடைத்த பணத்தில் இந்த நிறுவனங்கள் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளதால் அந்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கோரி உள்ளது.
இந்த வழக்கு சென்னை கூடுதல் சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருந்து வரும் ஜாபர்சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இயக்குனர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. பின்னர், விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தது.