லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீ காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். அரசியல் கலந்த கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வருகிறது.
கேம் சேஞ்சர் படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. படம் வெளியாக 75 நாட்கள் உள்ளதால் இப்போது ஸ்பெஷல் போஸ்டருடன் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.