இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
ஹிந்தியில் வெளியான 'அந்தாதூன்' என்ற படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார் நடிகர் தியாகராஜன். அவரது மகனான பிரசாந்த் நாயகனாக நடித்த இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
அதே நாளில் ஆஸ்ட்ரோ விண்மீன் என்ற வெளிநாட்டு சேனலிலும் இப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு லப்பர் பந்து, தங்கலான் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் அந்தகன் படமும் இணைந்து இருக்கிறது.