Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த பூமிகா

28 அக், 2024 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Bhumika-refused-to-act-in-Mani-Ratnams-film


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் 'ஆப்பிள் பெண்ணாக' கொண்டாடப்பட்டவர் பூமிகா. 'ரோஜா கூட்டம்', 'ஜில்லுனு ஒரு காதல்' என பல வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது 'பிரதர்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். பிரதர் படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்துள்ள பூமிகா தனது நேர்காணல்களில் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார். அதில் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது "நான் தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் மணிரத்தினம் சார் கம்பெனியிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. மணிரத்தினம் சார் படத்தில் நடிக்க விருப்பமா? என்று கேட்டார்கள். அதற்கு யாராவது மறுப்பு சொல்வார்களா நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.

பின்னர் தான் தெரிந்தது அதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது. அப்போது நான் பல தமிழ் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நீங்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். எனக்கு அது சரி என்று பட்டது. அதனால் நடிக்க மறுத்து விட்டேன்.

அந்தப் படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். நான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்ரன் நடித்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை தவறவிட்ட வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு. இவ்வாறு பூமிகா கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜான்வி, குஷி பகிர்ந்த பின்பக்க போட்டோ, குவிந்த 10 லட்சம் லைக்ஸ்ஜான்வி, குஷி பகிர்ந்த பின்பக்க ... தமிழ் சினிமாவைக் குறை கூறும் தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம் தமிழ் சினிமாவைக் குறை கூறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)