அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
2024 தீபாவளிக்கு 'அமரன், ப்ளடி பெக்கர், பிரதர்' ஆகிய மூன்று நேரடி தமிழ்ப் படங்களும், 'லக்கி பாஸ்கர்' என்ற டப்பிங் படமும் வெளியாக உள்ளது. டாப் வரிசை நடிகர்களின் படங்கள் எதுவும் வராத நிலையில் அடுத்த கட்டத்தில் உள்ள நடிகர்களின் படங்கள்தான் இந்த தீபாவளிக்கு வருகிறது.
அந்த விதத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோரது படங்கள்தான் போட்டியில் உள்ளன. சிவகார்த்திகேயன் நாயகனாக அறிமுகமாவதற்கு பத்து வருடங்கள் முன்பாகவே ஜெயம் ரவி நாயகனாக அறிமுகமாகிவிட்டார். இருந்தாலும் வியாபார அளவில், வசூல் அளவில் ஜெயம் ரவி பின்தங்கியே உள்ளார். கவின் தற்போதுதான் வளர்ந்து வருகிறார்.
இந்த தீபாவளி படங்களின் ஆன்லைன் முன்பதிவைப் பார்க்கும் போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்திற்கான முன்பதிவு அமோகமாகவே இருக்கிறது. முதல் நான்கு நாட்களுக்கான முன்பதிவு நிறைவாக நடந்துள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பு, ராணுவ அதிகாரியின் பயோபிக் படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு படத்திற்கு உள்ளது.
'பிரதர்' படத்திற்கு தற்போதைக்கு குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. முன்பதிவு எதிர்பார்த்தது போல இன்னும் அமையவில்லை. படம் வெளியாக இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்னும் டிரைலரைக் கூட வெளியிடவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு டீசர் மட்டுமே வெளியானது.
கவின் நடித்துள்ள 'ப்ளடி பெக்கர்' படத்திற்கு சில தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இந்தப் படத்திற்கும் அதிகமான தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
இன்றைய நிலவரப்படி முன்பதிவில் சிவகார்த்திகேயன்தான் முன்னணியில் உள்ளார். மற்ற இரண்டு படங்களும் வெளியான பின்பு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் மட்டுமே போட்டியில் ஓட முடியும். அதே சமயம் 'அமரன்' படம் வெளியான பின்பு அதன் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த வாரத்திற்கான வசூல் இருக்கும். படம் வெளிவருவதற்கு முன்னால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், படம் வெளிவந்த பின்பு கிடைக்கும் வரவேற்பும், வசூலும்தான் உண்மையான வெற்றி. அது யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பதற்கு ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும்.