தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகை துஷரா விஜயன். சார்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் போன்ற சில படங்களில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
சமீபத்தில் துஷரா விஜயன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, " நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே தனுஷின் தீவிரமான ரசிகை. தற்போது அவரின் இயக்கத்தில் அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் அவரை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் தனுஷ் குறித்து பரப்பி வரும் கிசுகிசுக்களும், குற்றச்சாட்டுகளும் என அனைத்தும் பொய்யானவை. தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர்; அவர் நடிப்பின் மீது அவ்வளவு பாசத்தை வைத்துள்ளார்". என இவ்வாறு தெரிவித்தார்.