மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'. ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகின்ற அக். 31ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வருகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் கதையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார், அவரின் மனைவி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இதனை நேர்த்தியான முறையில் படமாக்க பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.
இதற்கு ராணுவ வீரர்களின் ஒத்துழைப்பு பெரிதளவில் உள்ளதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் டில்லியில் உள்ள சில முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியில் அவர்களுடன் இணைந்து சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியும் கண்டு ரசித்துள்ளனர்.