வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
2024ம் வருட தீபாவளி அடுத்த வாரம் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நேரடி தமிழ்ப் படங்களாக 'அமரன், பிரதர், ப்ளடி பெக்கர்,' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இந்த ஆண்டில் இதற்கு முன்பு வெளியான சில படங்கள் இரண்டே முக்கால் மணி நேரம் கொண்ட படங்களாக இருந்தன. சில படங்கள் மூன்று மணி நேரம் வரையும் இருந்தன. ஆனால், அவை ரசிகர்களை சோர்வடைய வைப்பதாகவே இருந்தன. ரசிகர்களின் கமெண்ட்டுகளை வைத்து சில படங்களின் நேரத்தை பின்னர் குறைத்தார்கள்.
தீபாவளிக்கும் வெளியாகும் படங்களில் 'அமரன்' படம் அதிக நேரம் ஓடக் கூடிய படமாக 2 மணி நேரம் 48 நிமிடங்களாகவும், 'பிரதர்' படம் 2 மணி நேரம் 21 நிமிடங்களாகவும், 'ப்ளடி பெக்கர்' படம் 2 மணி நேரம் 16 நிமிடங்களாகவும் இருக்கிறதாம்.
'அமரன்' படத்தின் நீளம் மட்டும் அதிகமாக இருக்கிறதே என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அவ்வளவு நேரம் கடப்பது தெரியாமல் படம் விறுவிறுப்பாக நகர்ந்தால் எந்த சிரமமும் இல்லை. அப்படியே இருக்குமா மாற்றம் வருமா என்பது வெளியான பின்பு தெரிந்துவிடும்.