இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தற்போது குழந்தைகள் சினிமா என்கிற தனி பிரிவே இருக்கிறது. மைடியர் குட்டிசாத்தான், அஞ்சலி சமீபத்தில் வெளிவந்த பூ வரசம் பீ பீ, சாட் பூட் த்ரி வரையிலும் ஏராளமான குழந்தைகள் படம் இருக்கிறது. ஆனால் தமிழில் வெளிவந்த முதல் குழந்தைகள் படம் 'பாலயோகினி'. 1937ம் ஆண்டு வெளிவந்த இந்த படம்தான் முதல் குழந்தைகள் படம் என்று சினிமா வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த படத்தை கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார். அவரே தயாரித்தும் இருந்தார். கமல் கோஷ் உள்ளிட்ட 4 பேர் ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். மோதி பாபு, மாருதி சேதுராமய்யா ஆகியோர் இசை அமைத்திருந்தனர். இது குழந்தைகள் படம் என்றாலும் புரட்சிகரமான படமும் ஆகும்.
உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த ஒருவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் ஜெயிலுக்கு போகிறார். அவரை விடுவிக்க வேண்டும் என்று அவரது மனைவியும் சிறுமியான மகள் சரோஜாவும் கலெக்டரிடம் முறையிடுகிறார்கள். ஆனால் கலெக்டர் விரட்டி அடிக்கிறார். இதனால் தங்கள் வீட்டில் வேலை பார்த்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முனுசாமியின் வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள். பின்னர் முனுசாமி இறந்துவிட அவரது குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய கடமை வருகிறது. இதற்கு உயர் ஜாதியினர் எதிர்ப்பு தெரிவிக்க குழந்தை சரோஜா அவர்களுக்கு எப்படி பாடம் நடத்துகிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் சிறுமியாக நடித்த பேபி சரோஜாதான் தமிழ் சினிமாவின் முதல் குழந்தை நட்சத்திரம், சில படங்களில் நடித்திருந்தாலும் அவர் இன்றும் போற்றப்படுகிறார். இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் சகோதரன் மகள் சரோஜா. நடிகை லட்சுமியின் தாய் ருக்மணி இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. படம் பெரிய வெற்றி பெற்றது. அப்போதைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரோஜா என்று பெயர் வைத்தனர்.