இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'கிடைக்கிற கேப்-பில் கிடா வெட்றாங்க' என்பார்கள், ஆனால், கிடைக்கிற கேப்-பில் படங்களை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள். அடுத்த வாரம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன், ப்ளடி பெக்கர், பிரதர்,' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அந்தப் படங்களை விளம்பரப்படுத்த அதன் தயாரிப்பாளர்கள் சில பல கோடிகளை தாராளமாக செலவு செய்வார்கள்.
அந்த விளம்பர செலவுக்காகும் தொகையில் எடுக்கப்பட்டுள்ள படங்களாகத்தான் இந்த வாரம் வெளியாக சிறிய படங்களின் பட்ஜெட்டுகள் இருக்கும். நாளை அக்டோபர் 25ம் தேதி “ஆங்காரம், தீபாவளி போனஸ், கண் பேசும் வார்த்தைகள், காட்டேணி, ல்தாகா சைஆ, லூஸி, ஒற்றைப் பனை மரம், சேவகர், சீன் நம்பர் 52” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்தப் படம் வெளியாகும் என்பது நாளைதான் தெரியும்.
நவம்பர் மாதத்தில் 'கங்குவா', டிசம்பர் மாதத்தில் 'புஷ்பா 2, விடுதலை 2' ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் இடைப்பட்ட வாரங்களில் இப்படி பல சிறிய படங்கள் வெளியாவதைத் தவிர்க்க முடியாது.