ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
அருவி, வாழ், டாடா போன்ற படங்களில் நடித்தவர் பிரதீப் ஆண்டனி. கடந்த பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வெகுஜன மக்களிடமும் பிரபலமானவர். அந்த ஷோவில் தவறாக குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார் என மக்களின் ஆதரவை பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின் மக்கள் மத்தியில் அவருக்கு அதிக ஆதரவு கிடைத்தாலும் படங்களில் பெரிதாக அவரை பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியின் 34வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் சென்னையில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.