Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சிறையில் முதுகு வலியால் அவதிப்படும் நடிகர் தர்ஷன் ; பெங்களூருக்கு மாற்ற கோரிக்கை

22 அக், 2024 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Actor-Darshan-suffers-from-back-pain-in-jail;-Transfer-request-to-Bangalore


பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் சிறையில் அவருக்கு முறைகேடாக பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வெளியானதை அடுத்து கடந்த மாதம் பெல்லாரியில் உள்ள சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமினுக்காக விண்ணப்பித்துள்ளார் தர்ஷன். இந்த நிலையில் சிறையில் தர்ஷன் கடுமையான முதுகு வலியால் அவதிப்படுவதாகவும் இன்னொருத்தர் உதவியுடன் தான் நிற்கவும் நடக்கவும் முடிகிறது என்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டால், தன்னை மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வசதியாக பெங்களூருக்கு மாற்ற வேண்டும் என தர்ஷன் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் லால் ஜோஸ் டைரக்சனில் நடிக்கும் பஹத் பாசில்11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் லால் ... 37 வருடங்கள் கழித்து டிஜிட்டலில் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ஆவநாழி 37 வருடங்கள் கழித்து டிஜிட்டலில் ரீ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)