'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படம் 1991ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு அவர்கள் இருவரும் எந்த படத்திலும் இணையவில்லை. இந்நிலையில் நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னமும், கமலும் 'தக்லைப்' படத்தில் இணைந்திருக்கும் நிலையில் அடுத்தபடியாக ரஜினியும், மணிரத்னமும் இணையப் போவதாக சமீபத்தில் ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் நடிகை சுஹாசினி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரிடத்தில் அது குறித்து கேள்வி எழுப்பிய போது, ரஜினியும் மணிரத்னமும் மீண்டும் இணைவதற்காக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தி வெறும் வதந்தி என்று தெரிவித்திருக்கிறார் சுஹாசினி.