அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
‛ஓ மை கடவுளே' பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'டிராகன்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகமல் இருந்தது.
இந்த நிலையில் விஜயதசமி தினத்தையொட்டி டிராகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் பஸ்சின் மேல் பிரதீப் ரங்கநாதன் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைத்துள்ளனர். அந்த பஸ்சில் ஓர்ஸ்ட் ஸ்டூடண்ட் எனும் வரிகளை குறிப்பிட்டுள்ளனர். மேலும், பிரதீப் ரங்கநாதன் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த லவ் டூடே தமிழ் மொழியை கடந்து தெலுங்கிலும் நல்ல வசூலைப் பெற்றதால் டிராகன் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.