ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டும்தான் ஓடுகின்றன. சிறிய படங்களில் நல்ல படங்கள் என்ற விமர்சனங்களைப் பெற்ற ஒரு சில படங்கள் ஓடுகின்றன. மற்ற நடிகர்களின் படங்களை ரசிகர்கள் யாரும் கண்டு கொள்வதேயில்லை.
ஓடுகின்ற ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களையும் எந்த விதத்திலாவது 'டிரோல்' செய்து அவற்றை ஓட வைக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களில் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே அதிகமான மோதல் இருந்து வருகிறது. 'ஜெயிலர், லியோ' ஆகிய இரண்டு படங்கள் கடந்த வருடம் வந்த போது இந்த சண்டை மிக அதிகமானது.
இந்த வருடம் வெளிவந்த முக்கிய படமான 'இந்தியன் 2' படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. அந்தப் படம் ஓடாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு. கமல்ஹாசன் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம், க்ரின்ஞ்ச் ஆன காட்சிகள், ஷங்கரின் அரதப் பழசான அதே டெக்னிக் என சில பல காரணங்களைச் சொன்னார்கள். அதனால், அப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாகக் கிண்டலடிக்கப்பட்டது. அதை ரஜினி ரசிகர்கள்தான் செய்தார்கள் என தற்போது கமல் ரசிகர்கள் ரஜினியின் 'வேட்டையன்' படத்திற்கெதிராக களமாடி வருகிறார்கள். இதில் விஜய் ரசிகர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்.
நேற்று முன்தினம் வெளியான 'வேட்டையன்' படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் சற்றே குறைவான வரவேற்பு கிடைத்தாலும் படம் மோசம் என்ற விமர்சனம் எழவில்லை. இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக அப்படத்திற்கெதிராக கமல்ஹாசன், விஜய் ரசிகர்கள் ஒன்று திரண்டு எந்த அளவிற்கு எதிர்மறையாக டிரோல் செய்ய முடியுமா அவ்வளவு செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு வசூலைக் கொடுத்து தியேட்டர்களைக் காப்பாற்றி வரும் ரஜினி, விஜய் படங்களுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற நடிகர்களை எப்படி டிரோல் செய்வார்கள். இவற்றையெல்லாம் எதிர் கொண்டு சமாளிக்கும் விதத்தில் அப்படங்களின் தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டியது அவசியம். சினிமாவுக்குத்தான் புதுப்புது எதிரிகள் உருவாகி வருகிறார்கள் என தயாரிப்பாளர்கள் பெரும் கவலையுடன் இருக்கிறார்கள்.