பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி படமான 'சந்திரமுகி, முதல் 100 கோடி படமான 'சிவாஜி', முதல் 800 கோடி படமான '2.0' ஆகிய பெருமையைப் பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த். கடந்த வருடத்தில் வெளியான படங்களில் அதிக வசூலைப் பெற்ற படமாக அவர் நடிப்பில் வெளிவந்த 'ஜெயிலர்' படம் அமைந்தது. அப்படத்தின் வசூல் 600 கோடி என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அந்த வசூலை அடுத்து வந்த சில முன்னணி நடிகர்களின் படங்கள் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'லியோ', இந்த வருடம் வெளிவந்த 'தி கோட்' ஆகியவை அதைவிடக் குறைவாகவே வசூலித்தது.
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினியின் 'வேட்டையன்' படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படம் அவரது 'ஜெயிலர்' வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடமும், திரையுலகத்திலும் ஏற்பட்டுள்ளது.
பான் இந்தியா வரவேற்புக்கான நடிகர்களாக அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபட்டி ஆகியோர் இப்படத்தில் கூடுதலாக நடித்திருப்பதும் மற்ற மாநிலங்களிலும் படம் வசூலைக் குவிக்கக் காரணமாக அமையலாம் என்கிறார்கள். 'ஜெயிலர்' வசூலை மட்டும் முறியடிக்குமா அல்லது தமிழ் சினிமாவின் நம்பர் 1 வசூல் படமாக இருக்கும் '2.0' வசூலையும் சேர்த்தே முறியடிக்குமா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.
நாளை(அக்., 10) மட்டும் 5 காட்சிகள்
இதனிடையே வேட்டையன் படம் நாளை வெளியாகும் சூழலில் நாளை ஒருநாள் மட்டும் தமிழகத்தில் தியேட்டர்கள் உரிமையாளர்கள் 5 காட்சிகள் நடத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாளை முதல்காட்சி காலை 9மணிக்கு துவங்குகிறது.