ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர வில்லன் பி.எஸ்.வீரப்பா. தனித்த குரலில் வீராப்பு பேச்சு, வெடி சிரிப்புமாய் கலக்கியவர். சினிமா பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் கோவில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வீரப்பாவை சினிமாவுக்கு அழைத்து வந்தது கே.பி.சுந்தராம்பாள்.
காங்கேயம்தான் வீரப்பாவுக்கு சொந்த ஊர். தாத்தா வீட்டில் வளர்ந்தார். தாத்தாவிற்கு உதவுவதற்காக கிடைத்த வேலைகளை செய்து வந்தார். பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் இணைந்து கோவில் திருவிழாவில் நாடகம் போட்டார். அந்த நாடகத்தில் அவரே வில்லனாகவும் நடித்தார். அவரது நடிப்பை பார்த்து வியந்த மக்கள் தங்கள் ஊர் கோவிலில் வந்து நாடகம் போடுமாறு அழைத்தார்கள். பின்னர் அதனையே வருமானம் தரும் தொழிலாக மாற்றினார்.
ஒரு கோவில் திருவிழாவில் வீரப்பாவின் நாடகம் நடந்தது. அந்த கோவிலுக்கு கே.பி.சுந்தராம்பாள் சாமி கும்பிட வந்திருந்தார். மைக் இல்லாத அந்த காலத்தில் வீரப்பா பேசிய வில்லத்தனமான குரல் கே.பி.சுந்தராம்பாள் காதில் விழுந்தது. ஒரு ரசிகையை போல கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து நாடகத்தை பார்த்த அவர், நாடகம் முடிந்ததும் வீரப்பாவை சந்தித்து பாராட்டினார். சென்னை வந்தால் சினிமாவில் சேர்த்து விடுகிறேன் என்று கூறி தனது விலாசத்தை கொடுத்து வந்தார்.
சில நாட்களிலேயே சென்னை வந்த வீரப்பா கே.பி.சுந்தராம்பாளை சநதித்தார். அந்தக் காலத்தில் மிகப்பெரிய இயக்குநராகத் திகழ்ந்த எல்லீஸ் ஆர்.டங்கனுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் எழுதி, அதை வீரப்பாவிடம் கொடுத்துப் போய்ப் பார்க்கச் சொன்னார் கே.பி.சுந்தராம்பாள். யாருக்குமே சிபாரிசு கடிதம் கொடுக்காத சுந்தராம்பாள் வீரப்பாவிற்கு கொடுத்ததை பார்த்த எல்லீஸ் ஆர்.டங்கன் வாய்ப்பைக் கொடுத்தார்.
1939ம் ஆண்டு, 'மணிமேகலை' எனும் படத்தில், அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கே.பி.சுந்தராம்பாளும் நடித்திருந்தார். பிறகு அடுத்தடுத்த படங்களில் வீரப்பாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியபடி இருந்தார் டங்கன். எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அவருக்கு வில்லனாக நடித்ததும் அவரின் புகழை உயர்த்தியது. பின்னர் வில்லன் நடிகராக வளர்ந்தார். பிற்காலத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார்.
இன்று பி.எஸ்.வீரப்பாவின் 113வது பிறந்த நாள்.