ஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் நாயகியான ஓவியா | பாடம் கற்றுத் தந்த பிச்சைக்காரன் | தமிழில் அறிமுகமாகும் கேரள மாடல் | பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் | தண்டேல் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 'ராமாயணா' - 2026 தீபாவளி வெளியீடு | ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்? | சிவகார்த்திகேயன் 24வது படத்தில் இணைந்த அமரன் பட பிரபலம் | அட நம்ம பொம்மியா இது? வைரலாகும் லேட்டஸ் கிளிக்ஸ் | சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன் |
காமெடி நடிகர் கவுண்டமணி 90களில் உச்சத்தில் இருந்தார். அப்போது அவர் ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கினார். கவுண்டமணி தான் சம்பாதித்த பணத்தை கொண்டு ஏராளமான அசையா சொத்துக்களை வாங்கி குவித்தார். அந்த வகையில் கடந்த 1996ம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுண்ட், 454 சதுர அடி நிலத்தை வாங்கினார். அங்கு வணிக வளாகம் கட்ட அவர் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி அந்த இடத்தை அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்திடம் கொடுத்து 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ரூ.3.58 கோடி கொடுத்தார். ஆனால் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி கட்டுமான பணிகளை முடிக்கவில்லை. அதோடு அந்த இடத்தை அந்த நிறுவனமே கையகப்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தனது சொத்தை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு கவுண்டமணி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கவுண்டமணியிடமிருந்து பெற்ற நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பு மாதம் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் வாடகை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கட்டுமான நிறுவனம் 2021ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதிசெய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. இதை தொடர்ந்து நேற்று கவுண்டமணி தனது இடத்தை மீட்டார். இதன் தற்போதைய மதிப்பு 50 கோடி ரூபாய்.