படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகமும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் உருவாகிறது. இந்த பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இப்போது இதன் படப்பிடிப்பில் மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாதன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். தங்கலான் போன்று சர்தார் 2 படத்திலும் மாளவிகாவிற்கு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.