இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'தேவரா'. இப்படம் ஒரு வாரத்தில் 405 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதல் நாளில் 171 கோடி, இரண்டாம் நாளில் 243 கோடி, மூன்றாம் நாளில் 304 கோடி, ஆறாம் நாளில் 396 கோடி, ஏழாம் நாளில் 405 கோடி என அடுத்தடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டனர். இப்படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும் அது நிஜ வசூல்தானா என மற்ற தெலுங்கு முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். குறிப்பாக பிரபாஸ் ரசிகர்கள்தான் அது பற்றி பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
தெலுங்கு மாநிலங்களில் இப்படம் லாபக் கணக்கை ஆரம்பித்துள்ளது. ஹிந்தி மற்றும் வெளிநாடுகளில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கவும் வாய்ப்புள்ளது என டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.