லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து திரைக்கு வந்த 'தி கோட்' படம் ரூ.450 கோடி வசூல் செய்திருக்கிறது. தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த படத்திற்கு அடுத்து, எச். வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நாளை முதல் நடிக்க போகிறார் விஜய். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார் இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே.
இந்நிலையில் விஜய்யின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் 'கோட்' என்ற பெயர் இடம் பெற்ற மோதிரத்தை அவர் அணிந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர் டி.சிவா பரிசாக விஜய்க்கு வழங்கி உள்ளார். கோட் படத்தில் சிவாவும் ஒரு ரோலில் நடித்திருந்தார். தனது பரிசை ஏற்றுக் கொண்ட விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவா. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கினர்.