சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா சர்ச்சைக்கு பேர் போனவர். சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். நடிகர் ஆகாஷை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்தார். பின்னர் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். ஒருக்கட்டத்தில் அவரையும் பிரிந்தார். பின்னர் ராபர்ட் மாஸ்டர் உடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் பீட்டர் பால் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்தார். அந்த திருமணமும் நிலைக்கவில்லை. அதேசமயம் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமும், சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.
இந்த பரபரப்பிலேயே தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் வசந்தபாலன் இயக்கத்தில் அவர் நடித்த அநீதி படத்தில் அவரின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் கடற்கரை ஒன்றின் பின்னணியில் ராபர்ட் மாஸ்டரிடம் வனிதா தனது காதலை புரொபோஸ் செய்வது ஒரு பேட்டோ வெளியாகி உள்ளது. அதில் ‛Save the Date', அக்., 5ம் தேதி என குறிப்பிட்டு ராபர்ட் - வனிதா பெயரை குறிப்பிட்டுள்ளனர். இந்த போட்டோ திருமண கார்டு போன்று இருப்பதால் இதை வைத்து மீண்டும் வனிதாவின் திருமணம் பற்றிய செய்தி தொற்றிக் கொண்டுள்ளது. ராபர்ட் - வனிதா இருவரும் திருமணம் செய்ய போவதாக ஆளாளுக்கு வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுபற்றி விசாரித்தபோது இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதுபற்றிய அறிவிப்பை அக்., 5ம் தேதி வெளியிடுகின்றனர். அதற்காக தான் இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளம்பரத்திற்காக பரபரப்பாக்கி உள்ளனர்.