லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'தேவரா'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் முதல் நாளில் மொத்த வசூல் 172 கோடி, இரண்டாவது நாள் முடிவில் 243 கோடி, மூன்றாவது நாள் முடிவில் 304 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
படத்தின் முதல் வார இறுதி வசூல் அபாரம் என ஜுனியர் என்டிஆர் ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், நேற்று (செப்.,30) திங்கள் கிழமை அதன் வசூல் அதிர்ச்சியடையும் விதத்தில் அப்படியே குறைந்துவிட்டதாம். மிகக் குறைந்த அளவிலேயே அனைத்து மொழிகளிலும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை இருந்துள்ளது. இது தொடர்ந்தால் படம் 500 கோடி வசூலைக் கடப்பது சிரமம் என்கிறார்கள்.
தெலுங்கு மாநிலங்களில் கிடைத்த வசூல் இப்படத்திற்கு லாபத்தைக் கொடுத்துவிடும் என்றும் மற்ற மாநிலங்களில் நஷ்டத்தைத் தரலாம் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.