'தெறி' டீசர் சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'தெறி' ஹிந்தி டீசர் | பாலிவுட் வாரிசுகள் நடிக்கும் 'ஆசாத்' | அல்லு அர்ஜுன் மீதான தேர்தல் வழக்கு தள்ளுபடி | நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு… | ஏழை மக்களை கவுரவித்த மீனாட்சி சேஷாத்ரி, ராகுல் ராய், தீபக் திஜோரி | பாலியல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை: மஞ்சு வாரியர் வழக்கு தள்ளுபடி | 10 ஆயிரம் தியேட்டர்களில் 'கங்குவா' ரிலீஸ்? | ஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் நாயகியான ஓவியா | பாடம் கற்றுத் தந்த பிச்சைக்காரன் | தமிழில் அறிமுகமாகும் கேரள மாடல் |
ஒவ்வொரு வருடமும் கடைசி மூன்று மாதங்களில் நிறைய படங்கள் வெளியாகும். தீபாவளி பண்டிகை அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரும் போது அதற்கு முன்பும் பின்பும் அதிகப் படங்கள் வெளியாகும்.
இந்த வருடம் சில பெரிய படங்கள் கடைசி மூன்று மாதங்களில் வெளியாக உள்ளது. 'வேட்டையன், கங்குவா, விடுதலை 2' ஆகிய தமிழ்ப் படங்களும் 'புஷ்பா 2' டப்பிங் படமும் வெளியாகும் போது அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் ஓரிரு வாரங்களுக்கு வேறு புதிய படங்கள் வெளியாக வாய்ப்பில்லை.
'வேட்டையன்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அதனால், இந்த வாரம் சிறிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. “அப்பு, ஆரகன், செல்லக்குட்டி, நீல நிறச் சூரியன், ஒரே பேச்சு ஒரே முடிவு, சீரன், வேட்டைக்காரி” ஆகிய படங்கள் இந்த வாரம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளன. சிறிய படங்கள் நன்றாக இருந்தால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற வாய்ப்புகள் உண்டு. அப்படி இந்த வாரம் வரவேற்பைப் பெறும் அளவிற்கு எந்தப் படம் இருக்கப் போகிறது?.