நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் டொவினோ தாமஸ். வித்தியாசமான கதைகளையும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவரது படங்களுக்கென ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் அஜயண்டே இரண்டாம் மோசனம் என்கிற படம் வெளியானது. அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கியுள்ள இந்த படம் மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாகியிருந்தது.
இதில் மூன்று கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இதில் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், கிர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதன் வெற்றி வெளியான அன்றே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது 100 கோடி வசூல் கிளப்பில் இந்த படம் இணைந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஒரு போஸ்டருடன் வெளியிட்டு அறிவித்துள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.