ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தமிழக இசையமைப்பாளர் ஜனனிக்கு சிறந்த பாடகி மற்றும் இசையமைப்பாளருக்கான 6 விருதுகள் மும்பையில் வழங்கப்பட்டுள்ளன.
CLEF எனப்படும் இசை, வானொலி மற்றும் இசை விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் இந்திய சினிமா பிரிவில் ரயில் திரைப்படத்திற்கான 4 விருதுகள் : பூ பூக்குது ("ரயில்") பாடலுக்கு சிறந்த இசையமைப்பாளர், ஏலை செவத்தவனே ("ரயில்") பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகி சிறந்த திரைப்படப் பாடல் - பூ பூக்குது பாடலுக்கான தமிழ் ("ரயில்" படத்தில் இருந்து) மற்றும் எது உன் இடம் ("ரயில்") பாடலுக்கான சிறந்த இசை அமைப்பாளர் மற்றும் புரோகிராமர் என 4 விருதுகளை தமிழ் இசையமைப்பாளர் ஜனனி வென்றுள்ளார்.
மேலும் பிரம்மா குமாரிகளின் “சிவனே சிவனே ஓம்” என்ற பக்தி பாடலுக்காக சிறந்த பக்தி இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பக்தி ஆல்பம் என 2 விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுபற்றி ஜனனி கூறுகையில், ‛‛இந்த விருதுகள் பெறுவதற்குக் காரணமான இறைவனுக்கும், CMA குழுவினருக்கும், நடுவுர்களுக்கும், ரயில் திரைப்படத் தயாரிப்பாளர் வேடியப்பன், இயக்குனர் பாஸ்கர் சக்தி, பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா, பாடகர் ஹரிஹரன் அனந்து, பாடலாசிரியர் என்.குமார் மற்றும் இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி'' என்றார்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ மற்றும் எம்ஃபில் இசைப் பட்டம் பெற்றார். தற்போது இசையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு இசை ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே பிரபா என்ற படத்திற்கு இசையமைத்தவர் சில மாதங்களுக்கு முன் பாஸ்கர் சக்தி இயக்கிய ரயில் என்ற படத்திற்கு இசையமைத்தார்.