வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
பெண்கள், டிவி சீரியல்கள் பக்கமும், ஆண்கள் ஓடிடி பக்கமும் மாறிவிட தியேட்டர்கள் பக்கம் வந்து தமிழ் சினிமாவைத் தற்போது காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள் இளம் ரசிகர்கள் மட்டுமே என்றுதான் சொல்ல வேண்டும். இன்று காலை சென்னையில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்த 'பிரதர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சி முடிவதற்கு முன்பாகவே காலை காட்சிக்கான ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் வாசலை ஆக்கிரமித்திருந்தது. கல்லூரிப் பெண்களும், ஆண்களுமாக இளம் ரசிகர்கள் இவ்வளவு பேரைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. நேற்று வெளியான புதிய படங்களில் ஒன்றைப் பார்க்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட வைத்தது.
சரி, விசாரித்துப் பார்ப்போமே என்று அந்த ரசிகர்களிடம் கேட்டால், அனைவரும் கொரியன் படத்தைப் பார்க்க வந்துள்ளோம் என்றார்கள். அது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. சமீப காலங்களில் கொரியன் படத்தைப் பார்க்க இளம் ரசிகர்கள் அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்தது.
'ஜங் குக் - ஐயம் ஸ்டில்' என்ற கொரியன் படத்தைப் பார்க்கத்தான் அவ்வளவு பேர் கூடியிருக்கிறார்கள். சென்னையில் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் இன்றும், நாளையும் ஏறக்குறைய ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
தென் கொரியாவின் 'பிடிஎஸ்' ஆண்கள் இசைக்குழுவைச் சேர்ந்த ஜங் குக் நடித்துள்ள படம் இது. அவரைப் பற்றிய ஒரு டாகுமென்டரி படமாக உருவாகியுள்ள இப்படத்தைப் பார்க்கத்தான் நமது ரசிகர்கள் இவ்வளவு ஆர்வமாக வந்துள்ளனர்.