மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி | ராஷ்மிகாவின் 'மோதிர' ரகசியம்… | இந்தியன் 3 வருமா? வராதா? நாளை மறுநாள் தீர்வு கிடைக்குமா? | 7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு |

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிரூத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திலிருந்து மனசிலாயோ என்கிற முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்திலிருந்து இரண்டாவது பாடலாக 'ஹன்டர் வரார்' எனும் பாடல் நாளை(செப்., 20) வெளியாகிறது என கம்பொசிங் போது எடுத்த வீடியோ உடன் அறிவித்துள்ளார் அனிருத். தெருக்குரல் அறிவு எழுதிய இப்பாடலை சித்தார்த் பசூர் பாடியுள்ளார். இதில், " ஹேய் சூப்பர் ஸ்டாருடா , ஒன் அண்ட் ஒன்லி யாருடா, கெட்ட பையன் சாருடா, ரசிக்காதவன் கிடையா துடா" என்கிற வரிகளில் இப்பாடல் தொடங்குகிறது.