'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! |

நடிகர் விஜய் 2026ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலில் இறங்குகிறார். இதனால் தற்காலிகமாக விஜய் தனது அடுத்த படமான 69வது படத்தை கடைசி படமாக அறிவித்துள்ளார். வினோத் இயக்கும் இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகரான பாபி தியோல் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழில் கங்குவா படத்தில் பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.