ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அழகிய தீயே, மாயக் கண்ணாடி போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான நவ்யா நாயர். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். கேரளாவில், பட்டணங்காடு என்ற பகுதியில் சைக்கிளில் ரமேஷன் என்ற நபர் சென்றுள்ளார். அவர் மீது டிரைய்லர் லாரி ஒன்று மோதியது. இதில் ரமேஷன் தூக்கி வீசப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றது. இதை பார்த்த அந்த வழியே காரில் சென்ற நடிகை நவ்யா நாயர் லாரியை துரத்தி சென்று நிறுத்தினார். பின்னர் போலீஸிற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். காயமடைந்த ரமேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சினிமா பாணியில் சேஸிங் செய்து லாரி டிரைவரை பிடித்த நவ்யாவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.