தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

இப்போதெல்லாம் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நீளத்தை குறைப்பதும் கிளைமாக்ஸ் மாற்றுவதும் சகஜமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் கூட 'இந்தியன் 2' படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டன. இந்த வகையில் வெளியீட்டுக்கு பிறகு காட்சிகள் குறைக்கப்பட்ட முதல் படம் 'பவளக்கொடி'.
1934ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை கே.சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இருவருக்குமே இது முதல் படமாகும். எஸ்.எஸ்.மணி பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசையமைத்திருந்தார்.
படத்தில் 55 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. வசனங்களை விட பாடல்கள் அதிகமாக இருந்தது. நாயகனும் நாயகியும் சந்திக்கும் போதெல்லாம் பாடல்களாலேயே பேசிக் கொண்டனர்.
அன்றைய ரசிகர்கள் பாடலை ரசித்தாலும் அது கதையோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கருதினார்கள். இதனால் படம் வெளியான சில நாட்களிலேயே படத்திற்கான வரவேற்பு குறைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கே சுப்பிரமணியம், பத்து பாடல்கள் வரை குறைத்து, கதைக்கும் வசனத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் வெளியிட்டார். அதன் பிறகு படம் பல வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.