‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
தமிழகத்தில் அனுமதியின்றி அத்துமீறி வைக்கப்பட்ட 'பேனர்'களால் தொடர்ந்து சில விபத்துக்கள் நடந்தன. அதன்பின் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களின் எண்ணிக்கைகள் கொஞ்சம் குறைந்தன. இருந்தாலும் சில அரசியல் கட்சிகள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்னமும் பேனர்களை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சினிமா தியேட்டர்களிலும் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம்தான். முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய படங்கள் ஆகியவற்றிற்கு அப்படியான பேனர்கள் வைக்கப்படும். இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் தியேட்டர் வளாகங்களில் வைக்கப்படும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் பல தியேட்டர்களில் அகற்றப்பட்டன.
இதையடுத்து தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகர மேயருக்கு இந்த பேனர்கள் அகற்றப்படுவது குறித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில், “தற்போதைக்கு ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்களின் பேனர்களைத்தான் வைக்கிறோம். குறைந்த நாட்கள்தான் ஒரு படத்தின் உயிர் என்றாகிவிட்ட இந்நாட்களில் அப்படியான பேனர்கள்தான் எங்களது வியாபாரத்திற்குத் தேவையான ஒன்றாக உள்ளது. கடந்த 75 வருடங்களில் மாநகரத்தில், கடும் மழைக்காலத்தில் கூட எந்தவிதமான விபத்துக்களும் இதன் மூலம் நடந்ததில்லை. எங்களது வளாகங்களில் திரைப்பட பேனர்களை வைப்பதற்கான விலக்கு அளிக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறோம்,” என்று சில சட்ட விதிகளைக் குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே சமயம் விஜய் நடித்து செப்டம்பர் 5ல் வெளியாக உள்ள 'தி கோட்' படத்திற்காகவே இப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆளும் அரசான திமுக மோதல் நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதால்தான் இப்படி நடக்கிறது என்றும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். அதே சமயம், பொதுமக்கள் பலரும் இப்படியான கட்டுப்பாடுகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.