இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‛கூலி'. கடத்தல் பின்னணியில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து வரும் நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு நடிகர்களின் அறிவிப்பு போஸ்டர் உடன் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மலையாள நடிகர் சவுபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று(ஆக., 30) மூன்றாவதாக பிரீத்தி என்ற வேடத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த படம் மூலம் முதன்முறையாக ரஜினி, லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். அதேசமயம் இதற்கு முன் ஸ்ருதிஹாசன் உருவாக்கிய இசை ஆல்பத்தில் லோகேஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது.