பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
மிகச் சிறந்த பாடல்களை தந்தபோதும் அதிகம் அறியப்படாமல் போன இசை அமைப்பாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் டி.ஜி.லிங்கப்பா. கே.பி.சுந்தராம்பாளின் இசை குருவான கோவிந்தராஜுலு நாயுடு என்ற பிரபல இசையமைப்பாளருக்கு மகனாக பிறந்தவர் லிங்கப்பா. திருச்சி கோவிந்தராஜ் லிங்கப்பா என்பது இயற்பெயர். சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்மோனியம் வாசித்தார். மயூரா என்ற சினிமா ஆர்கெஸ்ட்ரா குழுவில் இணைந்து ஆர்மோனியம், மாண்டலின், கிடார் இசை கருவிகளை வாசித்தார். பின்னர் இசையமைப்பாளர், சி.ஆர்.சுப்பராமனின் உதவியாளர் ஆனார்.
அவர் இறந்தபின், டி.ஆர் மகாலிங்கமும் பந்துலுவும் சேர்ந்து தயாரித்து 1951ல் வெளியான 'மோகன சுந்தரம்' படத்தின் மூலம் இசையமைப்பாளரானார். பி.ஆர்.பந்துலு பத்மினி பிக்சர்ஸ் மூலம் 1954ம் ஆண்டு 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” படத்தை தயாரித்தார் அதற்கும் லிங்கப்பா இசை அமைத்தார். அதன்பிறகு பத்மினி பிக்சர்ஸ்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார் லிங்கப்பா.
நடிகராக இருந்த சந்திரபாபுவை பாடகராக்கியது லிங்கப்பா. பி.சுசீலாவிற்கு மிகவும் புகழ் தேடி தந்த“அமுதைப்பொழியும் நிலவே” (தங்கமலை ரகசியம்) பாடல் இவரது இசையமைப்பே. தமிழ் ,கன்னடம், தெலுங்கு மொழியில் பல படங்களுக்கு இசையமைத்த லிங்கப்பா 2000மாவது ஆண்டில் தன் 72 வது வயதில் காலமானார்.
இன்று டி.ஜி.லிங்கப்பாவின் 97வது பிறந்த நாள். இசை உலகம் அவரை மறந்திருந்தாலும் நாம் நினைவு கூர்ந்து வாழ்த்துவோம்.