பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

கிரிக்கெட்டையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளை திருமணம் செய்கிறார்கள், கிரிக்கெட் வீரர் பற்றி படம் எடுத்தால் அதற்கு வரவேற்பு இருக்கிறது. பல நடிகர்கள் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் படம் தயாரிக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேசும் இணைந்துள்ளார். கேரளாவில் நடைபெற உள்ள கேரள லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளராகி உள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. 6 அணிகள் கலந்து கொள்ளும் 33 போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த போட்டிகளுக்கான விளம்பர தூதராக மோகன்லால் இருக்கிறார்.