'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
மலையாள நடிகைகள் பாதுகாப்பு தொடர்பாக விசாரித்த ஹேமா கமிஷன் அறிக்கை, மலையாள திரை உலகில் புயலை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் மலையாள முன்னணி நடிகர் ஒருவர் தவறான நோக்கத்தில் தன்னை தனி அறைக்கு அழைத்ததாக பிரபல முன்னணி நடிகர் திலகனின் மகள் சோனியா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : எனது தந்தையை, நடிகர்கள் சங்கமான 'அம்மா'வில் இருந்து நீக்க 15 பேர் கொண்ட ஆணாதிக்க சக்திகள்தான் காரணம். எனது தந்தையின் மரணத்திற்கு பின், எனக்கும் பிரபல முன்னணி நடிகர் மூலம் மோசமான அனுபவம் ஏற்பட்டது. அந்த நடிகரின் பெயரை இப்போது கூற விரும்பவில்லை. நான் சகோதரனை போல் நினைத்து பழகி வந்த அந்த முக்கிய நடிகர் என்னை 'மகளே' என போனில் அழைத்து நேரில் பார்க்க வேண்டும் என கூறினார்.
அவரது பேச்சின் உள் அர்த்தம் எனக்கு புரிந்ததால், அவரது அழைப்பை தவிர்த்தேன். நான் படங்களில் நடித்தது இல்லை, ஆனாலும் என்னிடம் அப்படி நடந்து கொண்டார். அவரால் பின்னாளில் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த நடிகர் ஒரு கூட்டத்தில் எனது தந்தையை 'இறங்கி போடா' என கூறி அவமானப்படுத்தினார். நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் குறிப்பிட்ட 15 பேர் மாபியா கும்பலில் அவரும் ஒருவர்.
மலையாள சினிமாவில் எனது அப்பா திலகன் செய்த சாதனை, பெற்ற விருதுகள் காரணமாக அவரை முன்னணி நடிகர்கள் புறக்கணித்தனர். குணச்சித்திர வேடம் என்றாலும் வில்லன் கதாபாத்திரம் என்றாலும் மலையாள திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையாக பேசப்பட்டவர். அதனாலேயே அவரை பிற்காலங்களில் சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சோனியா தனது பேட்டியில் அந்த நடிகரை முன்னணி நடிகர் என்றும், நடிகர் சங்கத்தில் முக்கியமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதை வைத்து 'இவர் தான் அவர்' என்று நெட்டிசன்கள் அடையாளம் காட்டி வருகிறார்கள்.